சுவிற்சர்லாந்தில் உண்ணிகளால் பரவும் மூளைக்காய்ச்சலினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த 2018ஆம் ஆண்டு அதிகரித்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.சுவிற்சர்லாந்தில் கடந்த 2018ஆம் ஆண்டில் மாத்திரம் உண்ணிகளால் பரவும் மூளைக்காய்ச்சல் நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 380 என தெரியவந்துள்ளது.
இது கடந்த 2017 ஆம் ஆண்டை விடவும் அதிகம் என தெரியவந்துள்ளது. இருப்பினும் சுவிற்சர்லாந்திலுள்ள சுமார் 30 சதவிகித மக்கள் இதற்கான நோய் தடுப்பூசி எடுத்துக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.
ஒட்டுண்ணிகளால் ஆபத்து இருப்பதால் மேலும் எச்சரிக்கை விடுக்கப்படவுள்ளமை தொடர்பிலான அறிவித்தல் இம்மாத நடுப்பகுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.





