ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறும் முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு ஜேர்மனிய ஐரோப்பிய அமைச்சர் மைக்கேல் ரோத் பிரித்தானியாவை வலியுறுத்தியுள்ளார்.ஐரோப்பிய ஒன்றியத்தின் கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கும், பிரெக்ஸிற் குறித்து மீண்டும் சிந்தியுங்கள் என மைக்கேல் ரோத் இன்று பிரித்தானியாவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பிரெக்ஸிற் குறித்து பிரித்தானியா மீண்டும் சிந்திப்பதற்கு இரண்டாவது மக்கள் வாக்கெடுப்பு உதவுமெனவும் அதனால் மற்றுமொரு வாக்கெடுப்பை நடத்துமாறும் பிரித்தானியாவுக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
கடந்த சில வாரங்களில் தமக்கு என்ன வேண்டாம் என்பதை தெரிவித்த பிரித்தானியா தற்போது தமக்கு என்ன வேண்டும் என்பதை எமக்கு தெரிவிக்க வேண்டும் என தாம் எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் தமக்கு தெளிவான ஒருசமிக்ஞை தேவை எனவும் பேச்சுவார்த்தைகளுக்கு தாம் தயாராக உள்ளதாகவும் மைக்கேல் ரோத் தெரிவித்துள்ளார்.





