அமெரிக்க பங்குச் சந்தையில் இன்று (வெள்ளிக்கிழமை) நிலவரத்தின் படி கடும் சரிவு ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.சீனா உடனான வர்த்தகப் போர் உள்ளிட்ட பல்வேறு காரணங்களின் தாக்கத்தால், அமெரிக்க பங்குச் சந்தையில் சரிவு ஏற்பட்டுள்ளது.
மேலும் ஐபோன்கள் விற்பனை ஆண்டின் தொடக்கத்தை விட 5 சதவீதம் குறைவாக இருப்பதாகவும், விற்பனை தொடர்ந்து சரிந்து வருவதாகவும் அப்பிள் நிறுவனம் தெரிவித்தது.
இதன் தாக்கத்தால், அமெரிக்கப் பங்குச் சந்தையில் அப்பிள் உள்ளிட்ட தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் பங்கு மதிப்பு சரிவடைந்தது.
இதனால் முதலீட்டாளர்கள் கவலை அடைந்துள்ளதாகவும் அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன





