தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஊவா மாகாணத்தில் உள்ள அனைத்து தமிழ் பாடசாலைகளுக்குமான விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.அந்தவகையில், எதிர்வரும் 14 ஆம் திகதி (திங்கட்கிழமை) விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
ஊவா மாகாண சபை அமைச்சர் செந்தில் தொண்டமான் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
குறித்த விடுமுறைக்கான பாடசாலை நடவடிக்கையை மற்றொரு தினத்தில் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.
இதேவேளை, வடக்கு கிழக்கில் உள்ள பாடசாலைகளுக்கு எதிர்வரும் திங்கட்கிழமை பாடசாலை விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





