
ஆனாலும், பல கனேடியர்கள் இந்த தேசிய போஷாக்கு பரிந்துரைகளை கடைபிடிப்பதற்கு நேரமும், பணமும் அற்ற நிலையில் உள்ளனர்.
உணவு வழிகாட்டியாக பழைய முறையிலான ஒரு சாத்தியமான மூலோபாயம் உள்ளது. இதன் போது அனைத்து கனேடிய பாடசாலைகளுக்கும் போஷாக்கான உணவுகள் வழங்கப்பட்டு வந்தன.
எனினும் கூட்டாட்சி அரசாங்கங்கள் பதவிக்கு வந்த பின்னர் குறித்த நடைமுறைகள் கைவிடப்பட்டன.
இன்றைய நாளில் கனடா மாத்திரமே ஜி7 நாடுகளில் அடங்கும், ஒரே ஒரு தேசிய பாடசாலை உணவு நிகழ்ச்சித் திட்டம் அற்ற நாடாக உள்ளது.
இதற்கிடையில் கனடாவின் உணவு புள்ளிவிவரங்கள் கடுமையானவையாக இருக்கின்றன.
குறிப்பாக ஒவ்வொரு ஆறு குழந்தைகளில் ஒன்று குடும்ப உணவு பாதுகாப்பின்மை மூலம் பாதிக்கப்படுகிறது என்று வெல்லரி டராசுக் என்ற ரொறொன்ரோ பல்கலைக்கழகத்தின் போஷாக்கு விஞ்ஞான பிரிவைச் சேர்ந்த பேராசிரியரின் ஆய்விலிருந்து தெரியவந்துள்ளது.
