
பாரதிய ஜனதாவின் தேசிய மாநாடு டெல்லி ராம்லீலா மைதானத்தில் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி 10 ஆண்டுகளை வீணாக்கி விட்டது. அந்த ஆட்சியில் இழந்த தன்னம்பிக்கை மீண்டும் ஏற்பட்டு இருப்பதை எமது தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சி உறுதி செய்திருக்கிறது. தற்போது ஒரு புதிய நம்பிக்கை பிறந்திருக்கிறது.
ஒவ்வொரு ஆணும், பெண்ணும் தேசிய கட்டமைப்பில் பங்காற்ற விரும்புகிறார்கள். தங்கள் வரிப்பணம் உண்மையாகப் பயன்படுத்தப்படுகிறது என்ற நம்பிக்கை அவர்களுக்கு இருக்கிறது.
எந்த ஒரு ஊழல் குற்றச்சாட்டும் பாதிக்காத வகையில் ஒரு அரசால் இயங்க முடியும் என்பதை தேசிய ஜனநாயக கூட்டணி நிரூபித்திருக்கிறது. எங்கள் மீது தற்போது எந்த ஊழல் குற்றச்சாட்டும் இல்லை.
அதேநேரம் ஊழல் விவகாரத்தில் தவறிழைத்தவர்களை நாங்கள் விடப்போவதில்லை. ஊழலுக்கு எதிராக நாங்கள் மேற்கொண்ட நடவடிக்கைகள் அனைத்தும், பெரிய பனிப்பாறையின் ஒரு முனை போன்றதுதான்.
இந்தியாவிலும் சரி, வெளிநாட்டிலும் சரி ஊழல் தொடர்பாக தவறிழைத்த ஒருவரையும் நான் விடமாட்டேன்” என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
