
முதலமைச்சர் ஜெயலலிதா மரணித்த பின்னர் அவரின் கோடநாடு சொகுசு வீட்டில் மர்மமான மரணங்கள், திருட்டு, தற்கொலைகள் என பல்வேறு சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன.
அந்தவகையில் குறித்த சொகுசு வீட்டில் பணிபுரிந்து வந்த காவலாளி, சி.சி.டி.கமரா இயக்குநர், ஜெயலலிதாவின் வாகன சாரதி என அனைவரும் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர்.
குறித்த சம்பவங்களின் பின்னணியில் யார் உள்ளனர் என்பது தொடர்பில் பொலிஸார் தொடர்ச்சியாக ஆராய்ந்து வருகின்றனர். ஆனால் எந்ததொரு முன்னேற்றமும் இல்லை.
இந்நிலையில் ஊடகவியலாளர் ஒருவர் இச்சம்பவம் தொடர்பில் அதிகளவான தகவல்களை சேகரித்து அண்மையில் அதனை காணொளியாக வெளியிட்டுள்ளார். அதில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியே குறித்த சம்பவம் அனைத்துக்கும் காரணம் என்னும் வகையில் ஆதாரங்கள் காணப்படுகின்றன.
ஆகையால், இவ்விடயம் தொடர்பில் உண்மையை கண்டறியும்பொருட்டு ஆணைக்குழுவொன்றை அமைத்து விசாரணை மேற்கொள்ள வேண்டும்” என மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
