அமெரிக்காவில் இருபது நாட்களுக்கு மேலாக அரசு பணி முடக்கம் தொடர்கின்றது.இதனால் சுமார் எட்டு இலட்சம் அரச பணியாளர்கள் சம்பளம் இல்லாமல் வேலை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
அரசு பணி முடக்கத்தை சீர் செய்ய ட்ரம்புக்கும், குடியரசுக் கட்சி தலைவர்களுக்கும் இடையே அண்மையில் பேச்சுவார்தைகள் இடம்பெற்றன.
எனினும் இந்த கலந்துரையாடலில் இருந்து டிரம்ப் வெளிநடப்பு செய்த நிலையில், பேச்சுவார்தை எந்தவித இணக்கப்பாடுகளும் இன்றி முடிவடைந்தது.
இதன் காரணமாக அமெரிக்காவில் அரசு பணி முடக்கம் 22 ஆவது நாளை கடந்தும் தொடர்கின்றது. இதுவே அமெரிக்க வரலாற்றில் அரச பணிகள் முடங்கிய அதிகூடிய நாட்களாக கருதப்படுகின்றது.
இதற்கு முன்னர் 1995 ஆம் ஆண்டு ஜனாதிபதி பிள் கிலிண்டனின் ஆட்சி காலத்தில் 22 நாட்களுக்கு அரச பணிகள் முடங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.





