எதிர்ப்புகள் எவ்வாறு இருப்பினும் அவசர கால நிலையை பிரகடனப்படுத்தியாவது மெக்சிகோ எல்லையில் சுவர் கட்டப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கூறியுள்ளார்.மெக்சிகோவில் இருந்து சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறும் பலர், குற்றச் செயல்களில் ஈடுபடுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனை தடுக்க சுமார் 670 மைல் தொலைவுக்கு பல்வேறு வகைகளில் தடுப்புச் சுவர் அமெரிக்காவில் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் டொனால்ட் ட்ரம்ப், இரு நாட்டு எல்லையில் ஏறிக்கடக்க முடியாத, நுழைய முடியாத, உயரமான, பெரிய, உறுதியான எல்லைத் தடுப்புச் சுவர் எழுப்ப நடவடிக்கை எடுத்துள்ளார்.
இதற்கான ஒப்பந்தங்களில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ட்ரம்ப் கையெழுத்திட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதற்கு ஜனநாயக கட்சியின் எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்து ஒப்புதல் வழங்க தொடர்ந்தும் மறுத்து வருகின்றனர்.
இந்த பின்னணியில், கடந்த 22 நாட்களாக அரசு அலுவலகங்கள் செயல்படாமல் முடங்கி கிடக்கின்றமை குறிப்பிடத்தக்கது.





