
எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும், வெளிநாட்டு ஊடகவியலாளர் டோடா என்டோ உள்ளிட்ட குழுவினருடனான சந்திப்பு இன்று (சனிக்கிழமை) கொழும்பிலுள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றது. இதன்போதே அவர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.
நாட்டின் வளங்களைப் பயன்படுத்தி நாட்டை அபிவிருத்தி செய்யமுடியும் என எதிர்க்கட்சித் தலைவர் இதன்போது தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஜப்பான் போன்ற நாடுகளுக்கு அம்பாந்தோட்டை மாவட்டம் முதலீடுகளுக்கு சிறந்த மாவட்டம் எனவும் தெரிவித்தார்.
மேலும், தற்போதைய அரசாங்கத்திற்கு நாட்டின் அபிவிருத்தி குறித்தோ, மக்களின் நலன்கள் தொடர்பாகவோ எத்தகைய அக்கறையும் கிடையாது என்று தெரிவித்த அவர், இதன் காரணமாகவே நாட்டில் பல்வேறு நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார்.
