
காத்தான்குடி தள வைத்தியசாலையில் அவசியத் தேவையாக காணப்பட்ட ஆண்கள் சிகிச்சை விடுதி பாத்திமா பௌண்டேசனின் அணுசரணையில் அமைக்கப்பட்டு இன்று பொது நோயாளிகளின் பயன்பாட்டுக்காக திறந்து வைக்கப்பட்டது.
காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் எம்.எஸ்.எம்.ஜாபிர் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பாத்திமா பௌன்டேசனின் பணிப்பாளர் சஹாப்தீன் இக்ராம், சமூக செயற்பாட்டாளர் பிரோஸ் நவாஸ் ,வைத்திய அதிகாரிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
