
கடற்படையினரும், பொலிஸாரும் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பிலேயே இன்று 26 இன்று மதியம் மடக்கிப் பிடித்துள்ளனர்.
யாழ். மாதகல் கடற்பரப்பில் இருந்து வல்வெட்டித்துறை கடற்பரப்பிற்கு நூறு கிலோ கஞ்சா கடத்தப்படுவதாக கடற்படையினருக்கு இரகசிய தகவலொன்று கிடைக்கப்பெற்றது.
இதனையடுத்து துரிதமாகச் செயற்பட்ட கடற்படையினர் கஞ்சா கடத்தப்படுவதைப் பின்தொடர்ந்ததுடன் வல்வெட்டித்துறை கடற்பரப்பில் இறக்கப்படுவது தொடர்பாகவும் வல்வெட்டித்துறைப் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
இதனையடுத்து வல்வெட்டித்துறைக் கடற்கரையில் வைத்து 110 கஞ்சாவை கைப்பற்றியுள்ளதுடன் இக்கஞ்சாவைக் கடத்திய மூவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
இதன்போது நூறுகிலோ கஞ்சாவுடன் சந்தேகநபர்களை நீதிமன்றில் முற்படுத்தும் நடவடிக்கைகளை வல்வெட்டித்துறைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
