
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு இன்று(சனிக்கிழமை) தெரிவித்துள்ளது.
இதற்கமைய யுத்தத்தினால் ஊனமுற்ற, உயிரிழந்த முப்படையினரின் மனைவி மற்றும் தங்கிவாழ்வோருக்கே இவ்வாறு உதவிகள் வழங்கப்படவுள்ளன.
யுத்தத்தின் போது ஊனமுற்ற தமக்கான கொடுப்பனவுகள் அதிகரிக்கப்பட வேண்டும் என ஊனமுற்ற முன்னாள் இராணுவத்தினர் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வந்த நிலையிலேயே, ஜனாதிபதியின் ஊடகப்பிரிவினால் குறித்த அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
