LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Wednesday, January 9, 2019

பல்கலைக்கழக நிகழ்ச்சியில் கலந்துகொள்ள பிரதமர் ரெஜினாவிற்கு விஜயம்!

ரெஜினா பல்கலைக்கழகம் ஒன்றில் இடம்பெறவுள்ள நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் வகையில் பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ ரெஜினாவிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

அங்கு செல்லும் அவர் நாளை (வியாழக்கிழமை) இரவு ரெஜினா பல்கலைக்கழகத்தின் நிகழ்வில் கலந்துகொள்வார் என லிபரல் நாடாளுமன்ற உறுப்பினர் ரால்ப் குட்லெல் தெரிவித்துள்ளார்.

மேலும் குறித்த ரெஜினா பல்கலைக்கழகத்தின் உடலியக்கவியல் நிலையத்தின் திறப்பு விழாவிலும் மாலை 5 மணியளவில் கலந்துகொண்டு குறித்த நிலையத்தை திறந்துவைப்பார் என்றும் அதன் பின்னர் பொதுமக்களுக்கு உரையாற்றுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரது இந்த விஜயம் தொடர்பாக ரெஜினா-வஸ்கானா நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் பொதுப்பாதுகாப்பு அமைச்சர் கூறுகையில், “பிரதமர் இந்த விஜயத்தின்போது வேலைஉருவாக்கம், நடுத்தரவர்க்கம் மற்றும் பொருளாதாரத்தில் இருக்கும் பிரச்சினைகள் தொடர்பாக பொதுமக்களிடம் கேட்டறிவார்” என தெரிவித்துள்ளார்.

கடந்த இரண்டு ஆண்டுகளில் நாடு முழுவதும் பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ பலநகராட்சி மன்றங்களை நிறுவியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.




 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7