LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Wednesday, January 9, 2019

கொங்கோ தேர்தல் – தேர்தல்கள் ஆணையகத்தை சுற்றி பலத்த பாதுகாப்பு!

கொங்கோ ஜனநாயக குடியரசின் ஜனாதிபதி தேர்தலின் முடிவுகள் இன்று (புதன்கிழமை) இரவு அறிவிக்கப்படவுள்ள நிலையில் தேர்தல்கள் ஆணையகத்தின் தலைமையகத்தை சுற்றி  பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அந்தவகையில் தலைநகர் கின்ஷாசாவில் அமைந்துள்ள தேர்தல்கள் ஆணையகத்தின் தலைமையகத்தை சுற்றி கலக்கம் அடக்கும் பொலிஸார், ஆயுதம் தாங்கிய வாகனங்கள் மற்றும் நீர்த்தாரை பிரயோக வாகனமும் வரவழைக்கப்பட்டுள்ளன.

ஆபிரிக்காவில் இரண்டாவது பெரிய நாடாக காணப்படும் கொங்கோவில், கடந்த 2001ஆம் ஆண்டு ஜனாதிபதி ஜோசப் கபிலா ஆட்சிப்பொறுப்பை ஏற்ற பின்னர் நடைபெறும் முதலாவது தேர்தல் இதுவாகும். அவர் பதவி விலகுவதாக அறிவித்த பின்னர், இத்தேர்தல் நடைபெற்றது.

மேலும் ஜனாதிபதி தேர்தல் அறிவிப்பின் பின்னர் கொங்கோவில் தொடர்ச்சியாக வன்முறைகள் இடம்பெற்றது. இதற்காக முதற்தடவையாக மின்னணு வாக்குப்பதிவு இடம்பெறுகிறது.

அதற்கும் எதிர்ப்பு தெரிவித்து, கடந்த வாரம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் எரியூட்டப்பட்டன. இவற்றிற்கு அமெரிக்கா, ஐ.நா. போன்றவை எதிர்ப்பு தெரிவித்திருந்ததோடு, சுமூகமான தேர்தலை நடத்தவேண்டுமென வலியுறுத்தியிருந்தன.

கடந்த 1960 ம் ஆண்டில் பெல்ஜியத்திடமிருந்து சுதந்திரம் பெற்ற கொங்கோ, அன்றிலிருந்து கொங்கோ ஜனநாயக குடியரசாக செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7