
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான அடிக்கல்லை நடுவதற்காகமோடி, தமிழகத்துக்கு இன்று (ஞாயிற்றுக்கிழமை) வருகைத் தந்திருந்தார். இதன்போது அந்நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே நரேந்திர மோடி இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது,
“மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ள மதுரைக்கு வந்ததையிட்டும், இந்நகரில் எய்ம்ஸ் மருத்துவமனையை நிர்மாணிப்பதனை முன்னிட்டும் பெரும் மகிழ்ச்சி அடைகின்றேன்.
மேலும் சுகாதார துறையில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை சிறந்து விளங்குகிறது. நாட்டின் நான்கு திசைகளிலும் எய்ம்ஸ் மருத்துவமனை அமையவுள்ளது.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை 1,200 கோடி ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்படவுள்ளது. விரைவில் இது மக்களின் பயன்பாட்டுக்கு வரும்.
இதேவேளை கடந்த நான்கு ஐந்து ஆண்டுகளில் மருத்துவ கல்வியானது 30 சதவீதமாக அதிகரித்துள்ளது. ஆகவே அனைவருக்கும் குறைந்த விலையில் சிகிச்சை கிடைக்க மத்திய அரசாங்கம் முயற்சித்து வருகிறது.
ஆயுஷ்மான் பாரத் திட்டம் தொடங்கி வைத்ததும் வரலாற்றுச் சாதனையாகவே கருதப்படுகிறது. இத்திட்டத்தின் ஊடாக 10 கோடி குடும்பங்களுக்கு மருத்துவ காப்பீடு வழங்கப்படவுள்ளது.
இந்திய மக்களுக்கு, உலக தரத்தில் குறைந்த செலவில் சிகிச்சை கிடைக்க செய்வதே எங்களின் நோக்கம். தமிழகத்தில், 1,320 சுகாதார நிலையங்களை செயல்பாட்டிற்கு கொண்டு வந்ததையிட்டும் நாம் மகிழ்ச்சியடைகிறோம்” என நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்
