திருகோணமலை நகர எல்லைக்குள் உள்ள வீதியில் இரு பக்கமும்,பாவனைக்குதவாத வாகனங்கள் மற்றும் கட்டிடப்பெருட்கள் ( மணல் , கல்) போன்றவை பாதை ஓரத்தில் போடப்பட்டுள்ளதால் பாதசாரிகளுக்கும் வாகனங்களுக்கும் இடையூறாக இருக்கின்றது. எனவே அவற்றை உடனடியபக அகற்ற இன்று (04) முதல் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக திருகோணமலை நகராட்சி மன்றத் தலைவர் நா.இராஜநாயகம் தெரிவித்தார்.மேலும் தெரிவிக்கையில் இது தொடர்பாக பொலிஸ் நிலையத்தில் நடைபெற்ற போக்குவரத்து ஆலோசனைக்குழு கூட்டத்திலும் கலந்துரையாடப்பட்டு இப்பொருட்களை உடனடியாக அகற்ற வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.
பாதையில் இருபக்க ஓரத்திலும் போடப்பட்ட பொருட்கள் யாவும் நகராட்சி மன்றத்தால் அகற்றப்பட்டு பாதையை அகலமாக்கும் வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
எனவே வீதி ஓரத்தில் மேற்குறித்த பொருட்களை வைத்துள்ளோர் அதனை உடனடியாக தமது ஆதனத்திற்குள் எடுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிள்றேன்.
இவ் அறிவித்தலின் பின்னரும் தாங்கள் நடவடிக்கை எடுக்காவிடின் பாதையிலுள்ள பொருட்கள் யாவும் உாிமை கோராத பொருட்களாக கருதி அகற்றப்படும் என்பதையும் அறியத்தருகின்றேன் என திருகோணமலை நகராட்சி மன்றத் தலைவர் நா.இராஜநாயகம் தெரிவித்தார்.
அ . அச்சுதன்





