LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Thursday, January 24, 2019

கும்பமேளாவில் மொறீசியஸ் பிரதமர் பங்கேற்பு

இந்தியாவின் பிரயக்ராஜ் நகரில் இடம்பெற்றுவரும் கும்பமேளா நிகழ்வில், மொறீசியஸ் பிரதமர் பிரவிந்த ஜூக்நாத் மற்றும் அவரது பாரியார் பங்கேற்றனர்.

உலகின் மிகப்பெரிய சமய நிகழ்வு ஒன்றுகூடலாக காணப்படும் கும்பமேளாவில் வெளிநாடுகளில் வாழும் பலர் ஆர்வத்துடன் கலந்துகொள்கின்றனர்.

அந்தவகையில், மொறீசியஸ் பிரதமரும் அவரது பாரியாரும் இன்று (வியாழக்கிழமை) இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.

இந்நிகழ்வில் பங்கேற்றமை தமக்கு ஆன்மீக திருப்தியை தருவதாக குறிப்பிட்ட மொறீசியஸ் பிரதமர், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை வலுப்படுத்துவதாக அமைந்துள்ளதென்றும் கூறியுள்ளார்.

உலகம் முழுவதும் வாழும் இந்துக்கள் ஒன்றிணைந்து இறைவனை தரிசிக்கும் சந்தர்ப்பமாக இந்த கும்பமேளா நிகழ்வு இடம்பெறுகிறது.

2000 வருடங்கள் பழைமைவாய்ந்த இந்நிகழ்வானது, மூன்று வருடங்களுக்கு ஒருதடவை அனுஷ்டிக்கப்படுகிறது. அத்தோடு, இமயமலை உள்ளிட்ட இடங்களில் வாழும் முனிவர்கள் சந்திக்கும் இடமாகவும் இது காணப்படுகிறது.


 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7