LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Tuesday, January 22, 2019

சவூதி அரேபிய நாட்டின் இலங்கைக்கான தூதுவர் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம்


இன்று காலை விசேட  விமானம் மூலம் மட்டக்களப்பு விமான நிலையத்தை வந்தடைந்த இலங்கை நாட்டுக்கான சவூதி அரபிய நாட்டின் தூதுவரை கிழக்குமாகாண ஆளுநர் வரவேற்றார்

கிழக்கு மாகாண ஆளுநர் எ எல் எம் .ஹிஸ்புல்லாவின் அழைப்பின் பேரில் இலங்கை நாட்டுக்கான சவூதி அரபிய நாட்டின் தூதுவர் அப்துல் நர்சிர் உவையிஸ் அல் ஹார் ரிவி இன்று காலை மட்டக்களப்பில் உள்ள ஆளுநரின் அலுவலக இல்லத்தில் விசேட கலந்துரையாடலை மேற்கொண்டுள்ளார் .

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயத்தை மேற்கொண்ட சவூதி தூதுவர் மற்றும் சவூதி அரபிய நாட்டு பிரதிநிதிகள் காத்தான்குடியில் உள்ள பூர்வீக நூதனசாலையினை பார்வையிட்டார்

இதனை தொடர்ந்து காத்தான்குடி நகர சபை உறுப்பினர்கள் மற்றும் சிவில்  பிரதிநிதிகளினால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டதுடன் , நினைவு சின்னங்களும் வழங்கி வைக்கப்பட்டன .

இதனை தொடர்ந்து காத்தான்குடி கடற்கரை வீதியில் கிழக்கு மாகாண ஆளுநர் எ எல் எம் .ஹிஸ்புல்லாவின் நிதி பங்களிப்பில் நிர்மாணிக்கப்படுகின்ற வள்ளி வாசலை பார்வையிட்டனர்

இதை தொடர்ந்து காத்தான்குடி கலாசார மண்டபத்தில் நடைபெற்ற காத்தான்குடி பாத்திமா பாலிகா வித்தியாலயத்தின் வருடாந்த பரிசளிப்பு நிகழ்வில் கலந்துகொண்டு மாணவர்களுக்கான பரிசில்களை வழங்கி வைத்தார்

இந்நிகழ்வில் காத்தான்குடி நகர சபை தவிசாளர் உட்பட நகர சபை உறுப்பினர்கள் ,காத்தான்குடி பள்ளிவாசல்கள் உலமா சபையினர் ,சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள், பாடசாலை அதிபர்கள் ,ஆசிரியர்கள் ,பாடசாலை மானவர்கள கலந்துகொண்டனர்

இந்நிகழ்வினை தொடர்ந்து மட்டக்களப்பு ரிதென்ன பகுதியில் நிர்மாணிக்கப்படுகின்ற மட்டக்களப்பு பல்கலைக்கலகத்தினையும் பார்வையிட்டுள்ளார்







 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7