அண்மைய நாட்களில் மத்தியதரைக் கடலில் இடம்பெற்ற இருவேறு கப்பல்கள் கவிழந்த விபத்துகளில் உயிரிழந்த 170 அகதிகளுக்கு போப் பிரான்சிஸ் தமது இரங்கலை தெரிவித்துள்ளார்.லிபிய கடலில் ஜனவரி 18 ஆம் திகதி கப்பலொன்று கவிழ்ந்ததில் 113 அகதிகளும் அதற்கு சில நாட்களுக்கு முன்னர் மேற்கு மத்தியதரைக் கடலில் மற்றொரு படகு மூழ்கியபோது 53 அகதிகளும் உயிரிழந்ததாக அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையம் அறிவித்துள்ளது.
ஞாயிறன்று வத்திக்கான் நகரில் உள்ள செயிண்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் பேசிய போப் பிரான்சிஸ், விபத்துகளில் சிக்கி உயிரிழந்த அகதிகள் மேம்பட்ட வாழ்க்கை ஒன்றுக்கே ஆசைப்பட்டனர் எனவும் மனிதக்கடத்தலால் பாதிக்கப்பட்டவர்களாக இருக்கலாமெனவும் தெரிவித்தார்.
உயிரிழந்தவர்களுக்காகவும் அதற்கு காரணமானவர்களுக்காகவும் பிரார்த்தனை செய்யுமாறும் மக்களுக்கு போப் அழைப்பு விடுத்தார்.





