பிரெக்ஸிற்றின் பின்னர் பிரித்தானியாவுடன் வர்த்தக ஒப்பந்தமொன்றில் கையொப்பமிட தயாராக உள்ளதாக நியூசிலாந்து பிரதமர் ஜெசிண்டா ஆர்டன் தெரிவித்துள்ளார்.ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு பிரித்தானியா வெளியேறியதன் பின்னர் நியூசிலாந்து மற்றும் பிரித்தானியா இடையேயான சுதந்திர வர்த்தக உடன்படிக்கை ஒன்றுக்கான பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதே தமது முன்னுரிமையாக இருக்குமெனவும் அவர் தெரிவித்தார்.
2018 ஆண்டு செப்டம்பர் வரையிலான ஒருவருட காலப்பகுதியில் £1.41 பில்லியன் பெறுமதியான பொருட்கள் மற்றும் சேவைகளை இறக்குமதி செய்ததாகவும் £ 1.54 பில்லியன் பெறுமதியான பொருட்கள் மற்றும் சேவைகளை ஏற்றுமதி செய்ததாகவும் நியூசிலாந்து தெரிவித்துள்ளது.
இது ஐரோப்பிய ஒன்றியத்துடனான நியூசிலாந்தின் வர்த்தகத்தில் மூன்றில் ஒரு பங்கு எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியா எமக்கு ஒரு முக்கிய வர்த்தக பங்காளி, பிரித்தானியா தயாராக இருந்தால் அவர்களுடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை ஒன்றைச் செய்துகொள்வதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம் என ஜெசிண்டா ஆர்டன் தெரிவித்தார்.
மேலும் உடன்பாடற்ற பிரெக்சிற் அனைவருக்கும் மிகுந்த தாக்கத்தை உண்டாக்குமெனவும் நியூசிலாந்து பிரதமர் தெரிவித்தார்.





