
ஜல்லிக்கட்டு விழா தொடர்பாக நேற்று (சனிக்கிழமை) நடைபெற்ற ஆலோசனை கூட்டத்திலேயே இவ்விடயம் தீர்மானிக்கப்பட்டதாக ஆட்சியர் ரோகிணி ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்,
“சேலத்தில் நான்கு இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி எதிர்வரும் 18 ஆம் திகதி ஆத்தூர் கூலமேட்டிலும் 20 ஆம் திகதி கெங்கவல்லிலும், 21ஆம் திகதி நாகியம்ப்பட்டியிலும் 27 ஆம் திகதி தம்மம்பட்டியிலும் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஜல்லிக்கட்டு போட்டியின் போது நீதிமன்ற விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்” என ஆட்சியர் ரோகிணி அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
