
இதில் பயணித்த 45 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர்.
திண்டுக்கல் அருகே வேடசந்தூர் எவரெடி மில் பகுதியில் வந்து கொண்டுடிருந்தபோது பேருந்தின் முன்பக்க டயர் பயங்கர சத்தத்துடன் வெடித்துள்ளது. இதனால் பேருந்து திடீரென தீ பற்றி எரிந்துள்ளது.
இந்நிலையில், பேருந்தில் பயணித்த 45 பயணிகளும் தப்பி ஓடியுள்ளனர். இதன்காரணமாக பயணிகள் ஒருசிலருக்கு காயங்களும் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து வேடசந்தூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். ஆனாலும் பேருந்து முழுவதும் எரிந்து சேதமாகியள்ளது.
மேலும், ஒரு சில பயணிகளுக்கு காயம் ஏற்பட்தையடுத்து, அவர்களை திண்டுக்கல் அரசு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். விபத்து குறித்து வேடசந்தூர் பொலிஸார் வழக்குத்தாக்கல் செய்து விசாரணைகளை மேற்கெபண்டுள்ளனர்.
இதேவேளை, குறித்த விபத்தால் எந்தஉயிர் சேதமும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
