LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Saturday, January 12, 2019

சவுதி அரேபியப் பெண்ணுக்காக அவுஸ்ரேலிய பெண்கள் அரைநிர்வாண போராட்டம்!

சவுதி அரேபியாவை சேர்ந்த இளம்பெண்ணான ரஹப் முகமது அல்கியூனன் (18) பெற்றோருடனான கருத்து வேறுபாடு காரணமாக தன்னை அறையில் அடைத்து வைத்து சித்திரவதைக்கு உட்படுத்தியதாக கூறி நாட்டை விட்டு வெளியேறினார்.

அவர் குவேட்டில் இருந்து தாய்லாந்து தலைநகர் பாங்கொக் வழியாக அவுஸ்ரேலியா செல்லத் திட்டமிட்ட நிலையில், அவரிடம் வீசா உள்ளிட்ட ஆவணங்கள் இல்லாததால் தாய்லாந்து அதிகாரிகள் அங்கு தடுத்து வைத்தனர்.

அதன்பின்னர் அவரை சவுதி அரேபியாவுக்கே திருப்பியனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டது. அதற்கு மறுத்த ரஹப் அவுஸ்ரேலிய அரசு தனக்கு அடைக்கலம் தரவேண்டும் என பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூகவலைதளங்கள் மூலம் கோரிக்கைவிடுத்தார்.  இதனால் இந்த விவகாரம் சர்வதேச அளவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது.

இந்தநிலையில் அவருக்கு ஆதரவாக அவுஸ்ரேலியாவின் சிட்னி நகரில் சீக்ரட் சிஸ்டர் கூட் அமைப்பை சேர்ந்த 4 பெண்கள் மேலாடை அணியாமல் அரைநிர்வாணப் போராட்டம் நடத்தியுள்ளனர்.

ரஹப் முகமது அல்கியூனன் அவுஸ்ரேலியாவில் தங்க அடைக்கலம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கையில் பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டம் மேற்கொண்டுள்ளனர்.

இந்தப்போராட்டம் சிட்னியில் உள்ள சவுதி அரேபிய தூதரகம் முன்பு நடைபெற்றதுடன், இந்தக்காணொளி சமூகவலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே, அவுஸ்ரேலிய வெளியுறவு அமைச்சர் மரிஸ் பேனே தாய்லாந்து தலைநகர் பாங்கொக்கிற்கு சென்றிருந்தார்.

அவர் அந்தநாட்டு வெளியுறவு அமைச்சரைச் சந்தித்து கலந்துரையாடியதுடன், சவுதி அரேபியப் பெண்ணுக்கு அவுஸ்ரேலியாவில் அடைக்கலம் வழங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. பெரும்பாலும், ரஹப் முகமதுவுக்கு அவுஸ்ரேலிய அரசு அடைக்கலம் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7