
Science என்ற அமெரிக்க அறிவியல் சஞ்சிகையில் வெளியிடப்பட்டுள்ள சீன அறிவியல் கழகத்தின் ஆய்வாளர்களின் ஆய்வு அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், பல்வேறு வகையான கடல்வாழ் உயிரினங்கள் ஆபத்துக்குள்ளாகியுள்ளன. அத்துடன், உலகின் முக்கிய உணவு ஆதாரம் பாதிப்படையக் கூடும் எனவும் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அண்மைய ஆண்டுகளில், உலக வெப்பநிலை அதிகரிக்காமல் நிலையாக உள்ளதென்ற கணிப்புகளைப் பொய்யாக்கியுள்ளது இந்தப் புதிய ஆய்வு அறிக்கை.
புதைபடிவ எரிபொருள்களை எரிப்பதால் ஏற்படும் வெப்பவாயுக்கள், பூமியின் காற்று மண்டலத்தில் சிக்கி உலகத்தின் வெப்பநிலையை உயர்த்துவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதிகரிக்கும் காற்றின் வெப்பநிலையைப் போன்றே கடலின் வெப்பநிலையும் அதிகரிப்பதாக cience என்ற அமெரிக்க அறிவியல் சஞ்சிகையில் வெளியிடப்பட்டுள்ள சீன அறிவியல் கழகத்தின் ஆய்வாளர்களின் ஆய்வு அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
வெப்பவாயுக்களின் வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்த முயற்சிகள் எடுக்கப்படவில்லை என்றால் இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் பெருங்கடல்களின் வெப்பநிலை 0.78 டிகிரி செல்சியஸ் ஆக அதிகரிக்கும் எனவும் இதன்போது எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
