LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Tuesday, January 22, 2019

தேர்தலில் களமிறங்குகிறார் கரீனா கபூர்?

மத்திய பிரதேச மாநிலத்தின் தலைநகரான போபால் தொகுதியில் பிரபல ஹிந்தி நடிகை கரீனா கபூரை காங்கிரஸ் சார்பில் போட்டியிட வைக்கலாமா என பரீசிலிக்கப்பட்டுவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் மத்திய பிரதேச சட்டசபைத் தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியைக் கைப்பற்றிய காங்கிரஸ் கட்சி, எதிர்வரும் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் போபால் தொகுதியை கைப்பற்றுவதற்கான வியூகத்தை வகுத்து வருகிறது.

இதையடுத்து போபால் தொகுதியில் பிரபலமான ஒருவரை காங்கிரஸ் சார்பில் களம் இறக்கினால் நிச்சயமாக பா.ஜ.க.வை வீழ்த்தி வெற்றிபெற முடியும் என்ற யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. இதன்படி கரீனா கபூரை காங்கிரஸ் சார்பில் போட்டியிடவைப்பது தொடர்பாக பரிசீலிக்கப்பட்டுவருகிறது.

ஹிந்தி பேசும் மாநில மக்களிடம் தனக்கென தனி இடத்தைப் பிடித்துள்ள நடிகை கரீனா கபூர் போட்டியிட்டால் மக்கள் ஆதரவளிப்பார்கள் என காங்கிரஸ் தலைவர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7