LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Friday, January 4, 2019

அரச திணைக்களங்கள் மீது பொது மக்களுக்கு அவ நம்பிக்கை -நாடாளுமன்ற உறுப்பினர் க.துரைரெட்ணசிங்கம்

திருக்கோணேஸ்வரர் ஆலய கடைகள் விவகாரத்தில் அரச திணைக்களங்கள் மீது பொது மக்களுக்கு அவ நம்பிக்கை ஏற்படும் விதத்தில் சம்பவங்கள் இடம் பெருகின்றது என திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் க.துரைரெட்ணசிங்கம் தெரிவித்தார்.

இன்று (03) திருகோணமலை மாவட்டச் செயலகத்தில் இடம் பெற்ற திருக்கோணேஸ்வரர் ஆலயத்தில் உள்ள கடைகளை அவ்விடத்தில் இருந்து அகற்றி மலையடிவாரத்தில் அமைப்பது தொடர்பாக இடம் பெற்ற விசேட கலந்துரையாடலில் கலந்து கொண்டு பேசும் போதே இவ்வாறு தெரிவித்தார். 

தொடர்ந்து அவர் கருத்து தெரிவிக்கும் போது திருக்கோணேஸ்வரர் ஆலயத்தின் அன்னதான மடம் அமைக்க அங்கிருந்த மரத்தை வெட்டிய போது அதற்கு நான்கு திணைக்களங்கள் செயற்பட்ட விதமும் ஆலயத்திற்கு அருகாமையில் கடைகள் அமைக்கப்பட்டுள்ளதும் அதனால் ஏற்படும் இயற்கை சமநிலை சீர்குலைவுக்கு இத்திணைக்களங்கள் மேற் கொண்ட நடவடிக்கைகள் தொடர்பில் பொது மக்கள் மத்தியில் அவ நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் எவரையும் பாதிப்பக்குள்ளாக்குவது எவரின் நோக்கமும் அல்ல ஆலயத்தின் புனிதத்தன்மையும ஆலய தரிசனத்திற்கு செல்லும் பக்தர்களுக்கு; அமைதியான சூழ்நிலையும் ஏற்பட வழிவகுக்க  வேண்டும்.இதுவே  இந்துக்களுக்கு  இன்று தேவையாகவுள்ளது.

இந்த ஆலயம் விஜயன் காலத்துக்கு முற்பட்டது.இதன் தோற்றம் வளர்ச்சி தொடர்பில் இலங்கையர் மட்டுமல்ல உலக வாழ் இந்துக்கள் அவதானித்து வருகின்றனர்.எனவே இந்த கடைகளை அகற்றுவது தொடர்பில் உள்ள சின்ன சிக்கலை நாம் சுமூகமாக தீர்த்து அனைவரும் சமாதானமாக வாழ வழிவகுக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் க.துரைரெட்ணசிங்கம் தெரிவித்தார்.

(அ . அச்சுதன்)









 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7