LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Friday, January 4, 2019

நெற்செய்கை பாதிப்பு நிவாரணம் வழங்குமாறு கோரிக்கை ..!



திருகோணமலை மாவட்டத்தில் ,
குச்சவெளி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட 06 வயல் பிரதேசங்களில்  சுமார் 775 ஏக்கர் காணியில் செய்கை பண்ணப்பட்ட வேளாண்மையை அரக்கொட்டியான் சேதப்படுத்தி வருவதாக  விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

சமுளங்குளப் பிரதேசத்தில் 153  ஏக்கரும் செஞ்சாலி பகுதியில் 180 ஏக்கரிலும்,  இலுப்பைக்குளப் பகுதியில் 155 ஏக்கரிலும்,  குயவனாறு பிரதேசத்தில் 160 ஏக்கரிலும், பொய்கை குளப் பகுதியில் 112 ஏக்கரிலும், நாவுலாறு பகுதியில் 15 ஏக்கரிலும், இம்முறை பெரும்போக நெற்செய்கை பண்ணப்பட்டிருக்கிறது.

இதில் சிலருடைய  வயல்கள், அரக்கொட்டியான் தாக்கத்தால்  முழுமையாகவும்   சிலருடைய வயல்கள் பகுதியளவிலும் பாதிக்கப்பட்டிருப்பதோடு, மேலும் சிலருடைய வயல்கள் தொடர்ந்தும் பாதிக்கப்பட்டுக் கொண்டும் வருகின்றன.

இன்னும் இரு வாரங்களில் அறுவடை செய்யக் காத்திருக்கின்ற நேரத்தில்  இந்த நிலைமை ஏற்பட்டிருப்பது குறித்த விவசாயிகள் அதிர்ச்சி தெரிவிக்கின்றனர்.

அரக்கொட்டியான் தாக்கத்தில் இருந்து நெற்கதிர்களைப் பாதுகாப்பதற்காக பெருந்தொகைப் பணத்தைச் செலவு செய்து, பூச்சி நாசினிகளைப் பலமுறை தெளித்தும் அவற்றைக் கட்டுப்படுத்த முடியாது போயுள்ளதாகவும் தெரிவித்தனர்.

கடந்த டிசெம்பர் மாத இறுதிப் பகுதியில் தொடராகப் பெய்த அடை மழையால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாகவே, இந்த அரக்கொட்டியான் தாக்கம் ஏற்பட்டிருப்பதாக,  குச்சவெளி கமல நல சேவைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எனவே  இதனை ஓர் இயற்கை அனர்த்தமாகக் கருதி, பாதிக்கப்பட்ட  ஏழை விவசாயிகளுக்கு  உரிய நிவாரணத்தைப் பெற்றுக்கொடுக்க சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென  பாதிக்கப்பட்ட விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.

(அ . அச்சுதன்)



 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7