வாழைச்சேனை பாசிக்குடாவில் அமைந்துள்ள பிரபலமான விருந்தினர் விடுதியொன்றில் கடந்த 26.01.2019(சனிக்கிழமை) நள்ளிரவு 11.45 மணியளவில் இனந்தெரியாத நபரினால் பெற்றோல் குண்டு வீச்சு நடாத்தப்பட்டதில் தெய்வாதீனமாக 08 வெளிநாட்டு உல்லாசப் பிரயாணிகள் உட்பட 12 பேர்கள் மயிரிழையில் தப்பிப்பிழைத்தனர்.
குறித்த விடயம் சம்பந்தமாக தெரியவருவதாவது உள்ளுரைச் சேர்ந்த ஒருவரின் விருந்தினர் விடுதியின் பின்புறiமாக அமைந்துள்ள மற்றொரு விருந்தினர் விடுதியில் கடமையாற்றும் வெளிமாவட்டத்தைச் சேர்ந்த நபர் ஒருவரினாலேயே குறித்த பெற்றோல் குண்டு வீச்சு இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேற்படி விடயம் சம்பந்தமாக கல்குடா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதைத் தொடர்ந்து பொலிசார் மேற்கொண்ட துரித நடவடிக்கையின் பயனாக குறித்த விடுதி மற்றும் அயலிலுள்ள விடுதிகளின் சிசிரிவி காணொளிகள் பரிசீலிக்கப்பட்டதில் குறித்த பெற்றோல் குண்டு வீச்சு சம்பவத்தை மேற்கொண்ட நபர் பொலிசாரினால் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளதுடன் 14 நாள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
பாசிக்குடா சுற்றுலாப் பிரதேசத்தில் நடைபெற்ற மேற்படி சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன் பிரதேசத்தில் இவ்வாறான சம்பவம் நடைபெற்றது இதுவே முதற் தடவை என்பதும் குறிப்பிடத் தக்கது.
அசுவத்தாமா
அசுவத்தாமா
சம்பவ காணொளி இணைக்கப்பட்டுள்ளது.
