
கோறளைப்பற்று மத்தி மயிலங்கரச்சை பாரதி அறநெறிப்பாடசாலையின் தைப்பொங்கல் விழா கடந்த 20.01.2019ம் திகதி மயிலங்கரச்சை சிவமுத்துமாரியம்மன் ஆலய முன்றலில் நடைபெற்றது. இதன்போது இவ்வருடம் பல்கலைக்கழகத்திற்கு தெரிவான இவ் அறநெறிப்பாடசாலையின் ஆசிரியர் திரு..இ.கவிக்கிருபன் பிரதம அதிதியாக கலந்துகொண்ட கிழக்கிலங்கை இந்துசமய கலாசாரமேம்பாட்டு நிறுவனத்தின் பொதுச்செயலாளரும், சைவப்புலவரும், சோதிடருமான சிவஸ்ரீ. சி.சிவராஜா குருக்கள் அவர்களால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார். அறநெறிப்பாடசாலையின் அதிபர் திரு.ந.டிசான் மதுரங்க அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கோறளைப்பற்று - கோறளைப்பற்றுமத்தி இந்து அறநெறிப்பாடசாலைகள் ஒன்றியத்தினர், மயிலங்கரச்சை ஆலய நிருவாகிகள், கிராம முன்னேற்ற சங்கத்தினர், விளையாட்டு கழகத்தினர் , பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.