மருதமுனை தாறுள்ஹ_தா மகளிர் அறபுக் கல்லூரியில் 53 மாணவிகள் சித்தியடைந்துள்ளனர்.இவர்களில் 9 மாணவிகள் 3 பாடங்களிலும் “ஏ”சித்தி பெற்றுள்ளதாக கல்லூரியின் பணிப்பாளர் கலாநிதி அஷ்செய்க் எம்.எல்.முபாறக் மதனி தெரிவித்தார்.
முகம்மது ஹாரிஸ் செய்னா,முகம்மட் சாலிஹ் பாத்திமா பஹிமா,முகம்மட் அமீன் பாத்திமா அப்றா,நௌசார் பாத்திமா மிப்லா,ஹாமிட் லெப்பை பாத்திமா ரஸானா, முகம்மது அமானுல்லாஹ் தீஸான்,முகம்மது இஸ்மாயில் பாத்திமா ஜெசீலா,அப்துல்லா ஆயிஷா ஆப்ரின்,முகம்மது ஜஃபர் ஆபிரின் ஸீபா,ஆகிய மாணவிகளே 9 பாடங்களிலும் “ஏ” சித்தி பெற்ற மாணவிகளாவர்.

இவர்களில் பல மாணவிகள் 2ஏ,1பி சித்தியும்,சில மாணவிகள் 1ஏ.2பி சித்திகளும் பெற்றுள்ளனர் இம்முறை இக்கல்லூரியில் இருந்து பரீட்சைக்குத் தோற்றிய 53 மாணவிகளும் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று பல்கலைக் கழகத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.
இக்கல்லூரி ஆரம்பிக்கப்பட்ட காலம் தொடக்கம் தொடர்ச்சியாக பல மாணவிகள் பல்கலைக்கழகம் சென்றுள்ளனர்.கடந்த வருடம் 33 மாணவிகள் பல்கலைக்கழகம் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பி.எம்.எம்.ஏ.காதர்
