மண்ணும் நீயே விண்ணும் நீயே விளங்கும் உலகின் முழுப்பொருள் நீயே
கண்ணும் நீயே கருவும் நீயே துலங்கும் கருத்தின் உள்பொருள் நீயே
பண்ணும் நீயே பதமும் நீயே பாடலில் ஒலிக்கும் ஓசையும் நீயே
நேற்றும் நீயே இன்றும் நீயே
நாளை என்ற காலமும் நீயே
நேரமும் நீயே நிமிடமும் நீயே ஓடிடும் நொடியதும் யாவையும் நீயே
ஆக்கமும் நீயே அழித்தலும் நீயே காத்தலும் முற்றாய் அருளலும் நீயே
ஆதியும் நீயே சோதியும் நீயே பெரும் ஒளிச்சுடராய் சீவனும் நீயே
பரமனும் நீயே பக்தனும் நீயே பாரினில் எல்லாம் பரம்பொருள் நீயே
நாதமும் நீயே விந்துவும் நீயே பஞ்சபூதம் ஐந்ததும் நீயே
புலனும் நீயே பொறியும் நீயே
நஞ்சதை உண்டு என் நெஞ்ச

நஞ்சதை உண்டு என் நெஞ்சிலும் நீயே
உச்சியில் நீயே நெற்றியில் நீயே கண்டம் நெஞ்சது வயிற்றிலும் நீயே
சக்கரம் நீயே அட்சரம் நீயே ஆறாதரத்து மூலாதாரம் முழுவதும் நீயே
எண்ணில் நீயே எழுத்தில் நீயே என்னுள் முழுதாய் முளைத்தவன் நீயே
அறிவும் நீயே தெளிவும் நீயே சித்தம் திறக்க சிந்தையுள் நீயே
உணர்வும் நீயே உள்ளோளி நீயே ஒப்பிலா ஆனந்தம் உலகில் நீயே
சங்கரன் ஜெய சங்கரன்❤️
சிவனடியான் 🙏