
இக்கருத்தரங்கு, மன்னார் பெரியமடு மகா வித்தியாலயத்தின் கேட்போர் கூடத்தில், அதிபர் குலதீபன் தலைமையில் இடம்பெற்றது.
குறித்த கருத்தமர்வில் பாடசாலை ரீதியில் மாணவர்கள் போதைப்பொருட்கள் பாவனையிலிருந்து தங்களை பாதுகாத்துகொள்வது தொடர்பாக விளக்கப்பட்டது. அத்துடன், போதைப்பொருள் பாவனை தொடர்பான குற்றச்செயல் ஒன்றினால் பாதிக்கப்படும் போது எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பது தொடர்பாகவும் தெளிவுபடுத்தப்பட்டது.
குறித்த கருத்துரைகள் பொது அமைப்புக்களின் அதிகாரிகள் மற்றும் ஊடகவியலாளர்களினால் வழங்கப்பட்டன.
போதை ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு தொடர்ச்சியாக பல பகுதிகளிலும் பாடசாலைகளிலும் விழிப்புணர்வுக் கருத்தரங்குகளும், பேரணிகளுடம் நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
