ஒரே நாளில் திரைக்கு வந்த படங்களான பேட்ட, விஸ்வாசம் இரண்டும் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி நடைப்போடுகிறது.
இரண்டு படங்களுக்கும் நல்ல வசூல் உள்ளது. ஆனால் பேட்ட படத்தை விட விஸ்வாசம் படம் சில இடங்களில் சற்று அதிகமாக வசூல் செய்துள்ளது.
தமிழ்நாடு பாக்ஸ் ஆஃபிஸில் முதல் நாள் வசூலில் விஸ்வாசம் தான் முதல் இடத்தில் உள்ளது. இரண்டாம் நிலையில் தான் பேட்ட உள்ளது.
ரஜினியின் படம் இரண்டாம் இடத்தை பிடிப்பது இது இரண்டாம் முறை. இதற்கு முன்னர், 27 வருடங்களுக்கு முன் 1992, அக்டோபர் 25 ல் ரஜினியின் பாண்டியன் படமும், கமல்ஹாசனின் தேவர் மகன் படமும் மோதியது.
இதிலும் ரஜினி படம் தமிழ்நாட்டில் முதல் நாள் வசூலில் இரண்டாம் இடத்தில் இருந்ததாம்.





