
இதனை முன்னிட்டு இரு நாடுகளின் தலைவர்களும் வாழ்த்துச் செய்திகளை பரிமாறிக்கொண்டனர்.
குறிப்பாக இரு நாடுகளும் இருதரப்பு உறவை வலுப்படுத்துவதில் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக சீன ஜனாதிபதி ஸீ ஜின்பிங் தெரிவித்துள்ளார்.
இந்த நூற்றாண்டில் உலகம் பல மாற்றங்களை எதிர்கொண்டுள்ளது. மனித சமுதாயமும் அபிவருத்தி மற்றும் இதர வாய்ப்புக்களில் பல சவால்களை எதிர்கொண்டுள்ளது. இந்நிலையில், பிரான்ஸூடன் தொடர்ந்தும் இணைந்து பணியாற்ற சீனா விருப்பம் கொண்டுள்ளதென குறிப்பிடடுள்ளார்.
சீனா – பிரான்ஸ் மூலோபாய கூட்டு நடவடிக்கையின் பிரகாரம், உலக சமாதானம், நிலையான அபிவிருத்தி ஆகியவற்றில் இணைந்து பணியாற்ற கடமைப்பட்டுள்ளோம் என்றும் சீன ஜனாதிபதி கூறியுள்ளார்.
இதேவேளை, இருநாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவானது, இரு நாடுகளினதும் சமாதானத்தின் சமிக்ஞை என பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் கூறியுள்ளார். ஐ.நா. பாதுகாப்புச் சபையின் இரு நாடுகளும் நிரந்தர உறுப்பினர்களான உள்ளன. இந்நிலையில், பரஸ்பர மரியாதையுடன் சர்வதேச அமைப்புமுறை சார்ந்து செயற்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, அணுசக்தி, விமானசேவை, வேளாண் உணவு, பொருளாதாரம் மற்றும் வர்த்தகத்தில் சீனாவுடன் இணைந்து பணியாற்றவுள்ளதாக மக்ரோன் குறிப்பிட்டுள்ளார்.
