LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Tuesday, January 22, 2019

கம்போடியாவிற்கு சீனா 4 பில்லியன் யுவான் உதவி

கம்போடியாவிற்கு சீனா 4 பில்லியன் யுவான் (588 மில்லியன் அமெரிக்க டொலர்கள்) உதவி வழங்க உறுதியளித்துள்ளதாக கம்போடிய பிரதமர் ஹுன் சென் தெரிவித்துள்ளார்.

இருநாடுகளுக்கும் இடையிலான உறவை இது மேலும் பலப்படுத்துவதாக அமைந்துள்ளதாக கம்போடிய பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.

சீனாவிற்கு உத்தியோபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள கம்போடிய பிரதமர், சீன பிரதமர் ஸீ ஜின்பிங்கை பெய்ஜிங்கில் இன்று (செவ்வாய்க்கிழமை) சந்தித்து கலந்துரையாடினார்.

சீனாவில் அவருக்கு மகத்தான வரவேற்பு வழங்கப்பட்டது. வரவேற்பு நிகழ்வின் பின்னர் இச்சந்திப்பு இடம்பெற்றதோடு, அதனைத் தொடர்ந்து பிரதமர் ஹுன் சென் மேற்குறித்த விடயத்தைக் கூறியுள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் தடை அச்சுறுத்தலுக்கு மத்தியில் இந்த உதவித்தொகையை வழங்க சீனா முன்வந்துள்ளது.

அத்தோடு, கம்போடியாவிலிருந்து 400,000 தொன் அரிசியை இறக்குமதி செய்ய சீனா ஜனாதிபதி உறுதியளித்துள்ளதாக ஹுன் சென் குறிப்பிட்டுள்ளார்.

2023ஆம் ஆண்டுக்குள் 10 பில்லியன் டொலர் பெறுமதியான இருதரப்பு வர்த்தகத்தை மேற்கொள்ளவுள்ளதோடு, சீன முதலீடுகளை அதிகரிப்பதாகவும் சீன ஜனாதிபதி உறுதியளித்துள்ளார் என கம்போடிய பிரதமர் தமது முகப்புத்தகத்தில் பதிவிட்டுள்ளார்.




 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7