
கிழக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் ஜே.எஸ்.டி.எம். அஸங்க அபேவர்தன இவ்விடயம் தொடர்பாக மத்திய கல்வி அமைச்சின் செயலாளருக்கு கடிதம் ஒன்றினை அனுப்பி வைத்துள்ளார்.
குறித்த கடிதத்தில் இது தொடர்பாக மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, “பிரதேச மக்களின் நீண்டகால வேண்டுகோளைக் கருத்திற் கொண்டு வாழைச்சேனை இந்துக் கல்லூரி, செங்கலடி மகா வித்தியாலயம், களுதாவளை மகா வித்தியாலயம், பொத்துவில் மத்திய கல்லூரி ஆகியவற்றை தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்த கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் நடவடிக்கை எடுத்துள்ளார்.
இப்பாடசாலைகளை தேசிய கல்லூரிகளாகத் தரமுயர்த்துமாறு மாகாணக் கட்டமைப்புக் குழுவினால் எடுக்கப்பட்ட தீர்மானத்தை மாகாணக் கல்விப் பணிப்பாளர், தொடர்பான அதிகார மட்டம், மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் ஆகியோர் அங்கீகரித்துள்ளார்கள்.
எனவே, இது குறித்து உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக் கொள்கின்றேன்” எனக் குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது
