
வவுனியாவில் பொங்கல் வியாபாரம் களைகட்டியுள்ளதை அவதானிக்க முடிகின்றது. நாளை மறுதினம் உழவர் தினமான தை முதலாம் திகதி பிறக்கவுள்ள நிலையில் தை பிறந்தால் வழிபிறக்கும் என்ற வாக்கிற்கிணங்க தைப்பொங்கலை மக்கள் சிறப்பாக கொண்டாடவுள்ளனர். இந்நிலையில் வவுனியாவில் நகர்ப்பகுதியொங்கும் உள்ள வர்த்தக நிலையங்களில் வியாபரம் களைகட்டியுள்ளது. இம்முறை மக்கள் மட்பாண்டப் பொருட்களை மக்கள் கொள்வனவு செய்து வருவது மகிளிச்சியளிப்பதாக மண்டபாண்ட உற்பத்தியாளர்களும் வியபாரிகளும் கருத்து தெரிவிக்கின்றனர். அத்துடன் கடந்த வருடத்தினைவிட இம்முறை மக்கள் அதிக ஆர்வத்துடன் பொங்கல் பொருட்களைக் கொள்வனவு செய்வதில் ஆர்வம் காட்டி வருவதாக வவுனியா வர்த்தகர்கள் எமது செய்திப் பிரிவிற்கு கருத்துத் தெரிவித்துள்ளனர்.