(பாண்டி)
அவுஸ்ரேலியா அன்பாலம் அமைப்பினால் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 300 வறிய மாணவர்கள் கல்வி உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு வியாழக்கிழமை நடைபெற்றது.
அவுஸ்ரேலியா அன்பாலம் அமைப்பினால் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 300 வறிய மாணவர்கள் கல்வி உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு வியாழக்கிழமை நடைபெற்றது.
கறுவாக்கேணி விக்னேஸ்வரா வித்தியாலயம், பொண்டுகள்சேனை கணபதி வித்தியாலயம், மயிலம்பாவெளி மகா வித்தியாலயம், முறுத்தானை ஸ்ரீ முருகன் வித்தியாலயம், முருக்கன்தீவு சிவசக்தி வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் தெரிவு செய்யப்பட்ட பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய 300 மாணவர்களுக்கு பயிற்சிக் கொப்பிகளும், எழுது கருவிகளும் வழங்கி வைக்கப்பட்டது.
அவுஸ்ரேலியா அன்பாலம் அமைப்பின் மாவட்ட பொறுப்பாளரும்;, தமிழ் தேசிய கூட்டமைப்பின் வாழைச்சேனை பிரதேச சபை உறுப்பினருமான க.கமநலநேசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பாடசாலை அதிபர்கள், கிராம அபிவிருத்தி சங்க தலைவர்கள், பெற்றோர்கள், நலன்விரும்பிகளும் எனப் பலர் கலந்து கொண்டனர்.
வறிய மாணவர்களின் கல்வியை முன்னேற்றும் நோக்கில்; அமைப்பின் உறுப்பினரும், வாழைச்சேனை பிரதேச சபை உறுப்பினருமான க.கமநலநேசனின் வழிகாட்டலில் அவுஸ்ரேலியா அன்பாலம் அமைப்பு பல்வேறு உதவிகளை வழங்கி வருகின்றது.














