LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Friday, January 4, 2019

செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவிற்கு 245 இலட்சம் ஒதுக்கீடு

                                                                  (பாண்டி)
செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் கம்பரலிய வேலைத் திட்டத்தின் 245 இலட்சம் ரூபா நிதியில் அபிவிருத்தித் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்தார்.

இதில் வீதி புரமைப்புக்கு 100 இலட்சம் ரூபாவும், பாடசாலை மைதானங்கள் புனரமைக்க 60 இலட்சம் ரூபாவும், பாடசாலைகளில் மலசல கூடங்கள் அமைக்க 20 இலட்சம் ரூபாவும், ஆலயங்கள் புனரமைக்க 65 இலட்சம் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் சித்தாண்டி 4 மணல் துறை வீதி, களுவங்கேணி 1 நெடியாமடு பாடசலை வீதி, செங்கலடி சந்தை வீதி, கொம்மாதுறை காந்தி வீதி, மாவடிவேம்பு 2 மாணிக்கவாசகர் வீதிகள் புனரமைக்கப்பட்டுள்ளது.  

இலுக்கு ஈரளக்குளம் ஸ்ரீ முருகன் ஆலயம், வந்தாறுமூலை மாரியம்மன் ஆலயம், மயிலவெட்டுவான் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயம், களுவங்கேணி -1 ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயம், கரடியனாறு குசலானமலை முருகன் ஆலயம், களுவங்கேணி -1 ஸ்ரீ அரசடி கண்ணகி அம்மன் ஆலயம், சின்னபுல்லுமலை ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயம், குமாரவேலியார் கிராமம் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம், ஏறாவூர் - 01 அரசடி பிள்ளையார் ஆலயம், மாவலையாறு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயம், பலாச்சோலை ஸ்ரீ மகா காளியம்மன் ஆலயம்,     தளவாய் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயம், கொம்மாதுறை மேற்கு ஸ்ரீ மகா பெரியதம்பிரான் ஆலயம் ஆலயங்களான ஆலயம் என்பவற்று புனரமைப்பு ஒதுக்கப்பட்டுள்ளது.

பாடசாலைகளான வந்தாறுமூலை மகா வித்தியலயம், செங்கலடி மத்திய கல்லூரி, களுவன்கேணி விவேகானந்தா வித்தியாலயம், மாவடிவேம்பு விக்னேஸ்வரா வித்தியாலயம், இலுப்படிச்சேனை அரசினர் தமிழ் கலவன் பாடசாலை, ஏறாவூர் விபுலானந்தா வித்தியாலயம் ஆகியவற்றுக்கு மைதான புனரமைப்புக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

அத்தோடு செங்கலடி விவேகானந்தா வித்தியாலயம், வந்தாறுமூலை கனேஷா வித்தியாலயம் ஆகியவற்றுக்கு மலசல கூடம் அமைக்கவும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இதற்கான வேலைத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு நிறைவு பெற்றுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் மேலும் தெரிவித்தார்.






 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7