LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Wednesday, January 23, 2019

2019 ஆம் ஆண்டின் உலகின் சக்திவாய்ந்த கடவுச்சீட்டுகள் பட்டியல் வெளியானது!

2019ஆம் ஆண்டுக்கான உலகின் சக்திவாய்ந்த கடவுச்சீட்டுகள் எவை என்ற புதிய பட்டியலை Henley Passport Index நிறுவனம் வெளியிட்டுள்ளது.

வீசா இன்றி எத்தனை நாடுகளுக்குப் பயணம் செய்யலாம் என்பதன் அடிப்படையில் இந்த புதிய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய உலகின் அதிசக்தி வாய்ந்த கடவுச்சீட்டு என்ற பெருமையை ஜப்பான் கடவுச்சீட்டு பெற்றுள்ளது. ஜப்பான் கட்வுச்சீட்டினை பயன்படுத்தி 190 நாடுகளுக்கு வீசா இன்றி சென்றுவர முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.

இந்த பட்டியலின் இரண்டாவது இடத்தில் சிங்கப்பூர் மற்றும் தென்கொரிய கடவுச்சீட்டுகள் காணப்படுகின்றன. இவற்றைப் பயன்படுத்தி 189 நாடுகளுக்குச் சென்று வர முடியும்.

மூன்றாவது இடத்தில் ஜேர்மனி மற்றும் பிரான்ஸ் கடவுச்சீட்டுகள் காணப்படுகின்றன.

4 ஆம் இடத்தில் டென்மார்க், பின்லாந்து, இத்தாலி, சுவீடன் ஆகிய நாடுகளின் கடவுச்சீட்டுக்களும் 5 ஆம் இடத்தில் லக்ஸம்பேர்க், ஸ்பெய்ன் கடவுச்சீட்டுக்களும் உள்ளன.

6ஆம் இடத்தில் பிரித்தானியா, அமெரிக்கா, நோர்வே, ஒஸ்ரியா, போர்த்துக்கல், சுவிஸ், நெதர்லாந்து உள்ளன.

கடந்த வருடத்துடன் ஒப்பிடும்போது அவுஸ்ரேலியா, நியூசிலாந்து கடவுச்சீட்டுகள் 7ஆம் மற்றும் 8ஆம் இடங்களிலிருந்து 10வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளன.

இதேவேளை, உலகின் அதிகசக்தி வாய்ந்த கடவுச்சீட்டுகளுக்கான பட்டியலில் முதல் 10 இடங்களைப் பிடித்துள்ள நாடுகளின் விபரங்கள் வருமாறு,

1. Japan — 190 (destinations)

2. Singapore, South Korea — 189

3. France, Germany — 188

4. Denmark, Finland, Italy Sweden — 187

5. Luxembourg, Spain — 186

6. Austria, Netherlands, Norway, Portugal, Switzerland, UK and US — 186

7. Belgium, Canada, Greece, Ireland — 184

8. Czech Republic — 183

9. Malta — 182

10. Australia, Iceland, New Zealand — 181


 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7