கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு 10 சதவிகிதம் கல்விக் கட்டணத்தை குறைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக ஒன்ராறியோ அரசாங்கம் அறிவித்துள்ளது.அதன்படி பல்கலைக்கழக கலை மற்றும் அறிவியல் பட்டதாரி மாணவர்கள் சுமார் 660 டொலரை சேமிக்கவும், கல்லூரி மாணவர் 340 டொலரை சேமிக்க வேண்டும் என்பதே இதன் பொருள் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
தற்போதைய பயிற்சிக் கட்டண கட்டமைப்பானது, பெரும்பாலான திட்டங்களுக்கு மூன்று சதவிகிதம் அதிகரித்துவிட்டது.
இந்தக் கல்வியாண்டு இறுதியில் முடிவடைகின்றநிலையில் முற்போக்கு கொன்சர்வேற்றிவ் அரசாங்கம் வியாழக்கிழமை ஒரு புதிய முறையாக அறிவிக்கவுள்ளது.
அந்த புதிய கட்டமைப்பின் கீழ், 2019-2020 ஆண்டுக்கு 10 சதவிகிதம் குறைக்கப்படும் என்றும் பின்னர் அது தொடர்ந்தும் செயற்பாட்டில் இருக்கும் என்றும் அரசாங்கம் அறிவித்துள்ளது.





