மட்டக்களப்பு மறை மாவட்டத்தில் மூன்றாவது முறையாக உயரமான கிறிஸ்மஸ் மரம் மட்டக்களப்பில் திறந்து வைக்கப்பட்டது.
மட்டக்களப்பு பெரிய உப்போடை தூய லூர்து அன்னை ஆலய வளாகத்தில் 35 அடி உயிரத்தில்
நிர்மாணிக்கப்பட்டுள்ள கிறிஸ்மஸ் மரம் பங்குத்தந்தை
அருட்பணி லோறன்ஸ் அடிகளாரின் தலைமையில்
கிறிஸ்மஸ் மரம் ஒளியூட்டப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது
மூன்றாவது முறையாக பங்கு மக்களின் ஒத்துழைப்புடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த கிறிஸ்மஸ் மரம் ஜெப
வழிபாடுகளுடன் பெரிய உப்போடை லூர்து அன்னை
ஆலய பங்குமக்களுடன் இணைந்து திறந்து வைக்கப்பட்டது
மூன்றாவது முறையாக நிர்மாணிக்கப்பட்ட கிறிஸ்மஸ் மரத்திற்கான ஒளியூட்டும் நிகழ்வில் பெருமளவான மக்கள் கலந்துகொண்டனர்





