மட்டக்களப்பு கல்வி வலயத்தின் மட்டக்களப்பு சின்ன ஊறணி இளங்கதிர் பாலர் பாடசாலையின்
வருடாந்த ஒளிவிழா நிகழ்வு சனசமூக நிலைய அபிவிருத்தி உத்தியோகத்தரும்
பாடசாலை இயக்குனருமான அன்பழகன்
குருஸ் தலைமையில்
பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது
பாலர் பாடசாலையின் வருடாந்த ஒளிவிழா நிகழ்வில்
சிறார்களின் கலாசார நடன நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் ஐந்தாம் தர புலமைப்பரிசில்
பரீட்சையில் சித்தியடைந்த மாணவனுக்கும் இளங்கதிர்
பாலர் பாடசாலை சிறார்களுக்கு, பரிசிகள்
வழங்கி வைக்கப்பட்டன
இந்நிகழ்வில் பிரதம
அதிதியாக மட்டக்களப்பு
மாவட்ட முன்பள்ளி செயலாற்றுப் பணிப்பாளர்
எஸ் .சசிகரன் , கலந்துகொண்டார் .
மட்டக்களப்பு
சின்ன ஊறணி இளங்கதிர் பாலர் பாடசாலையின்
வருடாந்த ஒளிவிழா நிகழ்வில் சிறார்களின் பெற்றோர்களும் கலந்து சிறப்பித்தனர்





