கிழக்குமாகாண கல்விப்பணிப்பாளர் மற்றும்
மட்டக்களப்பு மத்தி வலயக்கல்விப் பணிப்பாளர்
ஆகியோரை வரவேற்று கௌரவிக்கும் நிகழ்வு இன்று மாலை மட்டக்களப்பு
காத்தான்குடியில் நடைபெற்றது .
மட்டக்களப்பு காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம்
நிறுவனங்களின் சம்மேளத்தின் கல்வி அபிவிருத்தி சபையின் ஏற்பாட்டில் புதிதாக
கிழக்குமாகாண கல்விப்பணிப்பாளராக கடமைகளை பொறுப்பேற்றுள்ள மாகாண
கல்விப்பணிப்பாளர் எம் கே எம் மன்சூர் மற்றும்
மட்டக்களப்பு மத்தி வலயக்கல்விப் பணிப்பாளராக கடமைகளை பொறுப்பேற்றுள்ள வலயக்கல்விப் பணிப்பாளர் வைத்தியர் எஸ் எம் எம் எஸ் . உமர் மௌலானா ஆகிய இருவரையும் வரவேற்று கௌரவிக்கும் நிகழ்வு மட்டக்களப்பு
காத்தான்குடியில் நடைபெற்றது .
காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின்
சம்மேளத்தின் கல்வி அபிவிருத்தி சபையின் தலைவர்
சட்டத்தரணி எ எல் .அப்துல் சவாத் தலைமையில் காத்தான்குடி
ஷாஹீட் அல் ஹாஜ் எ அகமட்
லெப்பை ஞாபகார்த்த மண்டபத்தில் நடைபெற்ற கௌரவிப்பு நிகழ்வில் மட்டக்களப்பு
மத்தி கல்வி வலய உதவி கல்விப்பணிப்பாளர்கள் , கோட்டக்கல்விப் பணிப்பாளர் , மட்டக்களப்பு
மத்தி கல்வி வலய பாடசாலை அதிபர்கள் ,ஆசிரிய
ஆலோசகர்கள் முஸ்லிம் நிறுவனங்களின்
சம்மேளத்தின் கல்வி அபிவிருத்தி சபையின் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்
கடமைகளை பொறுப்பேற்றுள்ள பணிப்பாளர்களிடம் மட்டக்களப்பு
மத்தி கல்வி வலயத்திலும் ,கல்விக் கோட்டத்திலும் நிலவுகின்ற கல்விக்கான
தேவைப்பாடுகள் , ஆசிரியர்கள் பற்றாக்குறை , பாடசாலை மட்டத்தில் நிலவுகின்ற உட்கட்டுமான
குறைபாடுகள் தொடர்பாக சுற்றிக்காட்டப்பட்டு அதற்கான சிறந்த தீர்வுகளையும்
பெற்றுத்தருமாறு கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டன
