(முர்ஷீத்)
வாழைச்சேனை ஹைறாத் துறையில் இருந்து கடந்த 30ம் திகதி (வெள்ளிக்கிழமை) பயணத்தை மேற்கொண்ட வாழைச்சேனையச் சேர்ந்த முஹமது அலியார் முஸ்தபா, பிறைந்துறைச்சேனையை சேர்;ந்த ஆதம்பாவா அமீர், ஓட்டமாவடியை சேர்ந்த ஆதம்பாவா முஹம்மது புகாரி ஆகியோரைக் காணவில்லை என குறித்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்;ளது.
மீன் பிடிப்பதற்காக ஹைறாத் துறையில் இருந்து கடந்த 30ம் திகதிஇயந்திரப் படகில் மூன்று பேரும் சென்றுள்ளனர். மீன் பிடித்துக் கொண்டிருந்த சமயம் 6ம் திகதி (வியாழக்கிழமை) படகு பழுதடைந்துள்ளதுள்ளதாக படகு உரிமையாளரான வாழைச்சேனையைச் சேர்ந்த உசனார் காமிது லெப்பை என்பவருக்கு தொலைபேசி மூலம் தெரியப்படுத்தினர்.
அதன்பிற்பாடு இவர்களை காப்பாற்றும் முகமாக வாழைச்சேனை மீன்பிடி துறைமுக அலுவலகத்திற்கும், கடற்படை பிரிவினருக்கும், வாழைச்சேனை பொலிஸிலும் முறைப்பாடு செய்ததாக படகு உரிமையாளரான வாழைச்சேனையைச் சேர்ந்த உசனார் காமிது லெப்பை தெரிவித்தார்.
அதன் பிற்பாடு தொலைபேசி ஊடாக தொடர்புகளை மேற்கொண்டிருந்த சமயம் இறுதியாக 7ம் திகதி வெள்ளிக்கிழமை பேசியதாகவும், பின்னர் தொடர்பு கிடைக்கவில்லை என படகு உரிமையாளர் தெரிவித்தார்.
எனவே காணாமல் போன மூவரை தேடும் பொருட்டு கல்முனை, சம்மாந்துறை உட்பட பல இடங்களிலும் தேடுகள் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும், இதுவரைக்கும் எந்தவித தகவலும் கிடைக்கவில்லை என படகு உரிமையாளர் மேலும் தெரிவித்தார்.





