மட்டக்களப்பு கூழாவடி புதுமைபுரம் பங்கை பிறப்பிடமாக
கொண்ட அருட்தந்தை செற்றிக் ஜுட் ஒக்கஸ் மட்டக்களப்பு மறை மாவட்டத்தில் கல்முனை
பங்கில் உதவி பங்கு தந்தையாக பணியாற்றிய
.இவர் கடந்த சில காலமாக மட்டக்களப்பு
சத்துருக்கொண்டான் எவன் எஸ்டேட் பகுதிக்கு பொறுப்பாளராக நிர்வகித்து
வந்தார்
சத்துருக்கொண்டான் எவன் எஸ்டேட்
பகுதிக்கு பொறுப்பாளராக நிர்வகித்து வந்த அருட்தந்தை கடந்த சனிக்கிழமை காலை
எவன் எஸ்டேட் பகுதி உள்ள மின் கம்பத்தில்
பொறுத்தப்பட்டுள்ள மின் விளக்கினை
அணைப்பதற்காக சென்ற வேளையில் புடையன் பாம்பு கடிக்கு உள்ளான அருட்தந்தை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை அவரச சிகிட்சை
பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிட்சை பெற்று வந்த
அருட்தந்தை கடந்த புதன்கிழமை சிகிட்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்
உயிரிழந்த அருட்தந்தையின் இறுதி நல்லடக்கம் மறைமாவட்ட ஆயர் ஜோசெப் பொன்னையா
தலைமையில் புனித மரியாள் பேராலயத்தில் விசேட திருப்பலி ஒப்புகொடுக்கப்பட்டு
தொடர்ந்து அருட்தந்தையின் உடல் மரியாள்
பேராலயத்தில் இருந்து ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு மட்டக்களப்பு ஆலையடிச்சோலை
மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது
அருட்தந்தையின் இறுதி நல்லடக்க நிகழ்வில் முன்னாள் ஆயர் கிங்சிலி
சுவாமி பிள்ளை , மட்டக்களப்பு மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் , பிரதி முதல்வர்
கந்தசாமி சத்தியசீலன் ,கோட்டமுனை பள்ளிவாயல் பிரதம
இமாம் மௌலவி . எ ஜே எம் .இலியாஸ் , மற்றும்
அருட்தந்தையர்கள் , அருட்சகோதரிகள் , பொலிஸ் உத்தியோகத்தர்கள் , இராணுவ அதிகாரிகள்
கலந்துகொண்டனர்
இதேவேளை மட்டக்களப்பு கல்லடி 231 இராணுவ கட்டளை பிரிவின் மட்டக்களப்பு கஜபா பிரிவு
இராணுவ அதிகாரிகளினால் தாகசாந்தி நிலையம் அமைக்கப்பட்டு இறுதி நல்லடக்க நிகழ்வில்
கலந்துகொண்டவர்களுக்கு குளிர்பானம் வழங்கப்பட்டது
