
தேடல் கலை இலக்கிய அமைப்பின் ஓராண்டு நிறைவு இலக்கியவிழா சனிக் கிழமை (08) கவிமணி அ . கெளரிதாசன் தலைமையில் கிண்ணியா பொது நூலக கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.
ஒரு வருட பூர்த்தியை முன்னிட்டு "தேடல் விழுதுகள்" எனும் கவிதை நூலும் இதன் போது வெளியிட்டு வைக்கப்பட்டன. பாடசாலை மாணவர்களின் கலை கலாசார நிகழ்வுகளும் இதன் போது அரங்கேற்றப்பட்டன.
நூல் அறிமுகத்தினை கவிஞர். தில்லை நாதன் பவித்திரன் வழங்கினார்.நூல் நயவுரையை நேயம் சஞ்சிகையின் ஆசிரியர் எம்.எஸ்.நியாஸ் வழங்கினார்.
தேடல் கலை இலக்கிய அமைப்பினால் நடாத்தப்பட்ட கவிதைப் போட்டிகளில் வெற்றியீட்டிய கவிஞர்களுக்கான நினைவுப் பரிசுகளும் சின்னங்களும் நிகழ்வில் வழங்கப்பட்டன.
இவ் நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக கிண்ணியா நகர சபை தவிசாளர் எஸ்.எச்.எம்.நளீம், கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.எம்.எம்.அஜீத் , சிரேஷ்ட கலாசார உத்தியோகத்தர் வி.குணபாலா, கிண்ணியா உலமா சபை தலைவர் ஏ.எம்.ஹிதாயத்துள்ளா நளீமி, திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர் சங்கத்தின் தலைவர் அ . அச்சுதன் உட்பட இலக்கியவாதிகள், சமூக ஆர்வலர்கள் என பலரும் பங்கேற்றார்கள்.
( அ . அச்சுதன்)










