
அங்கு அவர் பணியாற்றிய ஆசிரியப் பணிக்குரிய வேலை அனுமதி விவகாரத்திலேயே அவர் அங்கு கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டதாக கூறப்பட்டது.
சீனாவின் மிகப்பெரும் தொழில்நுட்ப நிறுவனமான ஹூவாவியின் தலைமை நிதி அதிகாரியான மெங் வான்ஷோ கடந்த முதலாம் திகதி வன்கூவரில் வைத்து கைது செய்யப்பட்டதனை அடுத்து, இரண்டு கனேடியர்கள் சீனாவில் வைத்து அந்த நாட்டு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
சீனாவின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக விளங்கியதாக தெரிவித்தே குறித்த இரண்டு கனேடியர்களை சீனா தடுத்து வைத்துள்ள நிலையில், இரண்டு நாடுகளுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.
இவற்றின் இடையேயே ஆசிரியரான சாரா மக்கைவர் என்ற கனேடியர் கைது செய்யப்பட்டுள்ள போதிலும், தற்போது அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
சீன அதிகாரிகளால் விடுவிக்கப்பட்டுள்ள அவர் கனடா வந்தடைந்துள்ளதை உறுதிப்படுத்தியுள்ள கனேடிய வெளியுறவுத் திணைக்களம், இவர் கைது செய்யப்பட்ட விவகாரமும், ஏனைய இருவரும் கைது செய்யப்பட்டுள்ள விவகாரமும் வேறு பட்டவை என தெரிவித்துள்ளது
