
பனி விளையாட்டின்போது திசைமாறிச் சென்ற 45, 21 மற்றும் 40 வயதான குறித்த மூவரும் நேற்று கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமை, பனிப்பகுதிகளில் பயணிக்கும் வாகனங்கள் மூலம் குறித்த மூவரும் சென்றிருந்தபோது காணாமல் போயிருந்தனர்.
இவர்களை தேடி பாரிய மீட்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்ட நிலையில், நேற்று மாலை அவர்கள் கண்டுபிடிக்கப்பட்டதுடன், அதன் பின்னர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பாதுகாப்பாக குறித்த பிரதேசத்திலிருந்து அழைத்துவரப்பட்டனர்.
அல்பேர்டாவில் இம்முறை அதிகளவிலான பனிப்பொழிவு காணப்படுகிறது. இந்நிலையில், பனி விளையாட்டு, பனிச்சறுக்கல் போன்றவற்றில் ஈடுபடுபவர்களை அவதானமாகச் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
